” அந்த நொடி எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ” மஹா சொன்ன வார்த்தை …….. கண்ணீர் மல்க பேசிய ரவீந்தர் …… வெளியான வீடியோ …….

141

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் மற்றும் சோசியல் மீடியாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்றாக இருந்தது பிரபல பட தயாரிப்பு நிறுவனரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரது திருமணம் குறித்ததாக தான் இருக்கும் . காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் இவர் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை பண தேவைக்காக திருமணம் செய்து கொண்டார் என பல செய்திகள் வெளியான நிலையில் இதெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் தங்களது திருமணமாகி ஒரு வருடமானதை கொண்டாடிய நிலையில் அடுத்த வாரமே ரவீந்தர் போலீசாரால்  பண மோசடியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் . இதனைதொடர்ந்து அவரை ஜாமீனில் எடுக்க பல முயற்சிகளை எடுத்தும் பலனளிக்காத நிலையில் இறுதியாக உயர்நீதி மன்றத்தில் மனு  கொடுத்ததை அடுத்து அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவீந்தர் சமீபத்தில் வீடியோ ஒன்றை

பதிவிட்டுள்ளார் அதில், என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி தான் எனக்கு எல்லாமே அவள் எனக்கு கிடைத்த வரம்  அவளை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. மோசடி புகாரில் கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு செல்லும் போது நீ எப்படி உட்காருவா எந்திரிப்பா  என மகா கேட்கும் போது நொறுங்கி விட்டேன் எனது உடல் மற்றவர்கள் உடல் போல் இல்லை எளிதில் ஈடு கொடுக்காது . இதனால் எவ்ளோ எடுத்து சொல்லியும் கைது செய்து அழைத்து சென்று விட்டார்கள் நான் இதுவரை எந்த மோசடியும்

செய்யவில்லை . அவருடைய பல திருட்டுத்தனம் தப்பான தொழில் செய்வது எனக்கு தெரிய வந்ததை அடுத்து அதன் காரணமாக அப்பட்டமாக பழியை என்மீது சுமத்த பார்க்கிறார்கள். இனிமேல் நான் அவரை சும்மா விடமாட்டேன் அவருடைய அணைத்து வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏத்த போகிறேன் என கண்ணீர் கொட்ட கொட்ட பேசியுள்ளார் . இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………………

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here