Wednesday, December 11, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்லியோ பட விழாவில் விடாமுயற்சி பட அப்டேட் கொடுத்த த்ரிஷா ......... வெளியான தகவல்கள் .......

லியோ பட விழாவில் விடாமுயற்சி பட அப்டேட் கொடுத்த த்ரிஷா ……… வெளியான தகவல்கள் …. உற்சாகத்தில் ரசிகர்கள் ……

கடந்த சில வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாக அமோக வெற்றியை படைத்து  வருவது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம். இந்நிலையில் இந்த  படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இதன் வெற்றி விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் மிகவும்

கோலாகலமான  முறையில் நடந்து முடிந்தது . இதையடுத்து இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் மற்றும் படத்தில் நடித்த திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இந்நிலையில் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜயுடன் த்ரிஷா  ஹீரோயினாக நடித்திருந்த நிலையில் இது குறித்த பல சுவாரசியமான தகவல்களை பேசிய த்ரிஷா அதோடு படம் குறித்த பல

விசயங்களையும் பேசியிருந்தார். மேலும் அர்ஜுன் குறித்து பேசிய த்ரிஷா , நானும் அர்ஜுன் சாரும் செம லக்கி நாங்க ரெண்டு பெரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து ஒன்றாக நடித்து வருகிறோம் அந்த படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என சூசகமாக  கூறியிருந்தார் . ஏற்கனவே அர்ஜுன் மற்றும் த்ரிஷா இருவரும் விடாமுயற்சி படத்தில்

நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் த்ரிஷா பேசியுள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருவதோடு பலரும் இது குறித்து பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……………

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments