கடந்த சில மாதங்களாகவே திரையுலக பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரேமம் . இந்த படத்தின்
மூலமாக சினிமா உலகில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக
பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வந்த நிலையில் அண்மையில் தனது
இணைய பக்கத்தில் தாலியுடன் இருக்கும்படியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . மேலும் இது குறித்து கேட்கையில் இது அவர் சமீபத்தில் நடித்து வரும் சைரன் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி தான் இது . அதோடு இந்த படத்தில் ஜெயம் ரவி இவரை திருமணம் செய்வதாக இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் வெளியான நிலையில் இந்த சர்ச்சைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது…………………
View this post on Instagram