கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து
ரஜினி அடுத்ததாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினி மொய்தீன் பாய் எனும் சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதை
அடுத்து இந்த படம் முழுக்க கிரிக்கெட் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு இருக்கையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு சுமார் நாற்பது கோடி வரை சம்பளமாக வழங்கபட்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருவதோடு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……………………….