தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படமான கோட் படத்தில் நடித்து
வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் யாரும் எதிர்பாரதவிதமாக இளையராஜா அவர்களின் மகளும் பின்னனி பாடகியுமான பவதாரிணி அவர்கள் உடல்நல குறைவால் காலமான நிலையில் படத்தின் படபிடிப்பு காட்சிகள் நிறுத்தி வைக்கபட்டது. இதற்கிடையில் சென்னை திரும்பிய தளபதி விஜய் அவர்கள் படத்தில் நடிப்பதை தாண்டி அரசியலில்
கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக அரசியல் கட்சி தொடங்கபோவதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் தளபதி விஜய் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து கட்சியின் சின்னம், கொடி ,பெயர் ஆகியவை
அறிவித்த நிலையில் அதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க கூறிய நிலையில் அது எப்படியோ வெளியான நிலையில் தளபதி விஜய் அவர்கள் கோபமாக உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது……………