பொதுவாக திரையுலகில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாக இருக்கும் நிலையில் இவர்கள் குறித்த எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அது வேற லெவலில் வைரளாகி விடும். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசபட்ட நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது ராஜ்கிரண் அவர்களின் வளர்ப்பு மகள் பிரியா பிரபல சீரியல்
நடிகரான முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் இவர்களது திருமணத்தை ஏற்றுகொள்ளாத ராஜ்கிரண் அவர்கள் தனது கோபத்தை காட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் பிரியா மற்றும் முனீஸ் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ப்ரியா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், நான் கடந்த 2022-ம்
ஆண்டு முனீஸ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் மேலும் மீடியா மூலமாக எங்களது திருமணம் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் எங்களது திருமணம் சட்டபூர்வமானது இல்லை . இப்போது நாங்கள் பிரிந்து விட்டோம் இந்த திருமனத்தால் எனது அப்பா தான் மிகவும் காயபடுத்திவிட்டேன் அதுவும் ஒரு தடவை இல்லை நிறைய
வாட்டி ஆனால் அப்போதும் அவர்கள் என்னை தாங்கித்தான் பிடித்தார்கள் . இனி நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அது போதாது என பிரியா உருக்கமாக அழுதபடி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது………………….
Actor Rajkiran’s daughter apologizes to her father and a clarifies about her marriage after getting separated from Actor Munish Raja.#RajKiran #Priya #MunishRaja #Cineulagam pic.twitter.com/RftT5MOu7u
— Cineulagam (@cineulagam) February 1, 2024