பொதுவாக தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தான் அதிகளவில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர்
மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது இளமையான தோற்றம் மற்றும் சிறந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை மற்றும் அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.
இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்றைய நாளில் திருமண நாளை கொண்டாடும் வகையில் தனது கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………………