திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் காலமாகி வரும் நிலையில் நேற்றைய நாளில் மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில்
முன்னணி இசையமைப்பாளர் ஆன இசைஞானி இளையராஜா அவர்களின் மகளான பவதாரணி பின்னனி பாடகியாக பல படங்களில் பாடியுள்ள நிலையில் அவர் தொடர்ந்து சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கபட்டு வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுக்கும் வகையில் இலங்கை சென்ற நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி
காலமாகி உள்ளார். இதையடுத்து அவரது உடல் நல்லடக்கம் காரணமாக அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டது இதனைதொடர்ந்து பல முன்னணி திரையுலக பிரபலங்களும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் இளையராஜா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், அன்பு மகளே என தொடங்கும் வகையில் பவதாரிணியின்
சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் அதனை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்…………………….
அன்பு மகளே… pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024