பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்திற்கு இசையும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது அந்த வகையில் சினிமாவில் ஒரு காலத்தில் இசை ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில் தனது புதுவிதமான இசையால் பல இளைஞர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர்
ஏ ஆர் ரஹ்மான். ஒரு சில பபடங்களிலேயே தனது துள்ளலான இசையால் திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது இசையால் பெருமை சேர்த்து வருகிறார் . இதையடுத்து தனது இசைக்காக இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளையும் பல மாநில மற்றும்
மத்திய விருதுகளையும் வாங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் , அதில் பேசியபோது “எனக்கு ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியது அப்போது என்னுடைய அம்மா என்னிடம், நீ மற்றவர்களுக்காக வாழும் போது அந்த எண்ணம் உனக்கு நிச்சயம் தோன்றாது என கூறினார் . உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது
நிச்சயமாக சுயநலமாக இருக்கமாட்டீர்கள் . அதோடு அவருக்காக இசையமைக்கும் போதும், உணவு வாங்கி தரும்போதும் வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம் இந்த மாதிரியான விசயங்கள் தான் உங்களை வாழ்க்கை உடன் பயணிக்க வைக்கலாம்” என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………..