தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்
பாலிவுட் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ள நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது கணவரான அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இது குறித்து விசாரிக்கையில் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாகவே தனியாக இருந்து வருவதாகவும் பல இடங்களுக்கு தனியாக சென்று வரும் நிலையில் சமீபத்தில் கூட அயோத்தி ராமர் கோவிலுக்கு அமிதாப் பச்சன் குடும்பத்துடன் சென்ற நிலையில் ஐஸ்வர்யா வரவில்லை. இந்நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக கடந்த சில
தினங்களுக்கு முன்னர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது இணைய பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . இதையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதில் இருந்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது உறுதி ஆனதில் இருந்து பலரும் இதற்கு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்………………….