Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சன் டிவி முன்னணி சீரியலில் களமிறங்கிய நடிகை கௌசல்யா ....... அட அதுவும் இந்த சீரியலா...

சன் டிவி முன்னணி சீரியலில் களமிறங்கிய நடிகை கௌசல்யா ……. அட அதுவும் இந்த சீரியலா ………

இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் புதிதாக ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் நடித்த பல முன்னணி

நடிகைகள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் இன்றளவும் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை கௌசல்யா. இவ்வாறு

பிரபலமாக இருந்ததை அடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சில காலம் சினிமா பக்கமே வராமல் இருந்ததை அடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக சமீபகாலமாக பல இளம் நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனைதொடர்ந்து சினிமாவை அடுத்து சின்னத்திரை பக்கம்

கவனம் செலுத்திய நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான சுந்தரி 2 தொடரில் கௌசல்யா முக்கிய ரோலில் களமிறங்கி உள்ளார். கலெக்டர் பதவியை சுந்தரி ராஜினாமா செய்ய நினைக்கும் நிலையில் அவருக்கு அட்வைஸ் செய்யும் வகையில் அவரது கேரக்டர் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………………..

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments