சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சீதாராமம். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை மிருணாள் தாகூர்
இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருவதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மிருணாள்
சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மும்பையின் முக்கிய பகுதியான அந்தேரி வெஸ்ட் நகரில் இரண்டு விலையுயர்ந்த அப்பார்ட்மென்ட்களை வாங்கியுள்ளார். மேலும் இதன் விலை மட்டுமே சுமார் பத்து கோடிக்கு மேலாக இருக்கும் என கூறப்படும் நிலையில் கங்கனாவின் குடும்பத்தின் பெயரில்
இருக்கும் ஓபராய் ஸ்ப்ரிங்க்ஸ் அப்பார்ட்மென்ட்டில் தான் இனி இவர் வசிக்க போகிறாராம். அதோடு இதற்காக ஸ்டாம்ப் டுட்டி மட்டுமே சுமார் அறுபது லட்சத்துக்கும் மேலாக செலுத்தி இருப்பதாக தககவல்கள் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………