கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு தனது தேர்ந்த
நடிப்பு மற்றும் வசீகரமான நடிப்பால் தனக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல நடிகை ரகுல்ப்ரீத் சிங். இதையடுத்து தொடர்ந்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவர் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகிய வந்த நிலையில் இது குறித்து கேட்கையில் இவர் ஜக்கி பக்னானி என்பவரை
காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்போது மிகவும் பிரமாண்டமான முறையில் கோவாவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் இவர்களது திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் சீக்கிய முறைபடி நடந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் திருமணம் முடிந்த
கையோடு தனது திருமணம் குறித்து அனைவருக்கும் தெரியபடுத்தும் விதமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த திருமண ஜோடி தங்களுக்கு திருமண வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை கூறியுள்ளார். மேலும் அவர்களது திருமணத்தில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………………….