இன்றைக்கு பொருத்தவரை சினிமாவில் வெளிவரும் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் வேற லெவலில் பிரபலமாக இருந்து வருவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான சன் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும்
இல்லத்தரசிகள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதில் முன்னனி தொடர்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடரின் மூலமாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டு இன்றைக்கு பல முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த வருடம் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனது நீண்ட நாள் காதலரை மலேசியாவில்
சென்று ரசகியமாக திருமணம் செய்து கொண்டு திருமணத்தில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் வியப்படைய செய்திருந்தார். இப்படி இருக்கையில் அண்மையில் பிரியங்கா தனது இணைய பக்கத்தில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார் மேலும் பிரியங்கா
லைவ் வந்த போது ரசிகர்கள் பலரும் அவரிடம் நீங்கள் தற்போது சிங்கிளா என கேட்டதற்கு ஆமாம் என கூறியுள்ளார். இதையடுத்து திருமணமாகி ஒரு வருடம் முடிந்த நிலையில் தனது கணவரை பிரியங்கா விவாகரத்து செய்து விட்டாரா என்பது போலன பல கருத்துகள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..