திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு காலமாகி வருவதோடு ரசிகர்கள் மனதை உறைய வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும்
திரையுலக வட்டாரத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் ரித்துராஜ் சிங். பாலிவுட் சினிமாவில் பல முன்னணி
படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ள இவர் துணிவு படத்தில் சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் தனது நடிப்பால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல முன்னணி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு
எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி காலமானார். 59 வயதாகும் நிலையில் இவரது இந்த இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலக வட்டாரத்தில் பலரையும் மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது…………………