கடந்த சில தினங்களாக பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று இந்திய மட்டுமின்றி உலகளவில் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அம்பானி அவர்களின் இளைய மகனான ஆனந்த் அம்பானி அவர்களின் மகன் திருமணம் குறித்தது தான். ஆம் இவர்களது திருமணம் பல ஆயிரம் கோடி செலவில் மிகவும்
பிரமாண்டமான முறையில் ஜாம்நகரில் வெகு பிரபலமாக நடந்து வரும் பட்சத்தில் இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் உள்பட உலகளவில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான் கான், எம் எஸ் தோணி, சச்சின், அமிதாப் பச்சன் போன்ற பலரும் கலந்து கொண்ட நிலையில் இதில் ராம்சரண் , ஷாருக்கான் உள்ளிட்ட பலரும்
கலந்து கொண்டார்கள். இதையடுத்து இந்த விழாவில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுகுத்து பாடலுக்கு ஷாருக்கானும் சல்மான் கானும் நடனமாடி இருந்த நிலையில் அந்த தருணத்தில் ஷாருக்கான் இட்லி, வடை, சாம்பார் மேடைக்கு வாருங்கள் என ராம்சரனை அழைத்துள்ளார். இந்த நிலையில் ராம்சரனின் ஒப்பனை கலைஞர் ஜெபஹாசன்
பேசுகையில், நடிகர் ஷாருக்கான் அவர்கள் ராம்சரணை இட்லி, சாம்பார் , வடை என அழைத்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அது அவமரியாதையான செயல் , அதனால் சிறிது நேரத்தில் அங்கிருந்து வந்துவிட்டேன் என கூறியுள்ளார் அதோடு நான் ராம்சரனின் ரசிகன் எனவும் கூறிப்பிட்டுள்ளார் . இதையடுத்து பலரும் இதற்கு விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்……………..
Idli is not funny, same as Vada Pav or Vimal.
Stereotypical Racism disguised as fun and camaraderie is not welcome.#AnantRadhikaPreWedding pic.twitter.com/nubsz7G0Ig
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) March 5, 2024