பொதுவாக திரையுலகில் நடிப்பவர்கள் குறித்து வதந்திகள் மற்றும் சர்ச்சையான தகவல்கள் வெளியாவது இயல்பான ஒன்று இந்நிலையில் இது சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் அதிலும் சோசியல் மீடியாவில் சொல்லவே தேவையில்லை எனலாம். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு சுமார் ஐம்பது கோடி
மதிப்பில் விலையுயர்ந்த வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாக சவுக்கு சங்கர் தனது வீடியோவில் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதையடுத்து இது குறித்து அறிந்து இதற்கு விளக்கம் கொடுத்த நிவேதா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் எனக்காக ஏகப்பட்ட பணத்தை செலவழிப்பதாக பொய்யான பல தகவல்கள் அண்மையில் இணையத்தில் பரவி வருகிறது. இந்த மாதிரியான செய்திகளை பரப்புவதற்கு
முன்னர் சற்று யோசியுங்கள் அதோடு நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இது குறித்து மற்றும் என்னை குறித்து பேசபட்ட அணைத்து தகவலும் முற்றிலும் பொய்யானவை அவை அனைத்தும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிபடுத்த முடியும். கடந்த 2002-ம் ஆண்டு முதல் நன் எனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறோம் நான் இதனை
சட்டரீதியாக எதிர்கொள்ளவில்லை காரணம் பத்திரிக்கையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது என நம்புகிறேன். அவர்கள் என்னை இனி அவதூறு செய்யமாட்டார்கள் என என நம்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………..