தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தலைநகரம் இந்த படத்தில் வரும் வடிவேலு அவர்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் நிலையில் படத்தில்
ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிர்மயி. இவர் இந்த படத்தை தொடர்ந்து நான் அவன் இல்லை, அறை என் 305-ல் கடவுள், வெடி குண்டு முருகேசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல்
அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததை அடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில் தமிழில் வாய்ப்பு இல்லாததை அடுத்து மலையாளத்தில் அதிகளவில் நடித்து வருகிறார். இப்படி ஒரு
நிலையில் சமீபத்திய ஜோதிர்மயி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . காரணம் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நரைத்த முடி வயதான தோற்றம் என ஆளே மாறிவிட்டாரே என வாயடைத்து போனதோடு அவருக்கு அப்படி என்ன ஆச்சு என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்……………….