தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் பல இளம் நடிகைகளும் படங்களில் நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகளும் என்னதான் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள் . அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம்
என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் மறைந்த பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ தேவி. இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் ஸ்ரீ தேவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது உறவினர் திருமணத்திற்கு சென்ற நிலையில் அங்கு எதிர்பாரதவிதமாக காலமாகி பலரையும் உறைய செய்திருந்தார்.
இதையடுத்து அண்மையில் இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிர்ந்து வரும் பட்சத்தில் சமீபத்தில் அவரது இளமை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் அவருடன் இருக்கும் சிறுமி யாரென தெரிகிறதா…? அது வேறு யாருமில்லை ஸ்ரீதேவியின் அக்கா மகள் எனும் தோரணையில்
கருத்தம்மா படத்தின் மூலமாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை மகேஸ்வரி. தனது 17 வயதில் சினிமாவில் நுழைந்த இவர் நேசம், உல்லாசம், என்னுயிர் நீதானே, சுயம் வரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஸ்ரீ தேவியுடன் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்………………………