விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சமையல் மற்றும் நகைச்சுவை போட்டியை மையமாக கொண்டு வெளியாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் இன்னும் சில வாரங்களில் கோலாகலமாக துவங்க உள்ளதை
அடுத்து இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து இந்த சீசனில் புது மாற்றமாக நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பதிலாக புது நடுவரை நியமித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும் சமையல் கலை வல்லூனரான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்ள உள்ளார். இதற்கிடையில் சமீபத்தில்
வெளியான ப்ரோமோ வீடியோவில் செப் தாமு மற்றும் ரங்கராஜ் இருவரும் ஒன்றாக விமானத்தில் இருந்து இறங்குவது போல இருந்தது. இதனையடுத்து இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த சீசனில் பிரபல முன்னணி யூடுபரும் புட் ரிவியுவரான இர்பான்
கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இவரை அடுத்து நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வர இருக்கும் நிலையில் இளம் ஹீரோயின் ஒருவரை களமிறக்க திட்டமிட்டு அதன்படி திவ்யா துரைசாமி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருவதோடு பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர்……………………