தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான இயக்குனர் கங்கை அமரன். அவரும் அவர் மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட் பிரபு . இருவரும் இணைந்து தல அஜித்தையும் தளபதி விஜய்யையும் வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாக கூறி இருந்தனர். தற்போது அதற்கான முதற் கட்ட வேலையாக கதை ரெடி ஆகிவிட்டது என கூறினர். அடுத்த கட்டமாக இரு பிரபல நடிகர்களிடம்
கதை யை சொல்லி ஒப்பந்தம் வாங்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் தல மற்றும் தளபதி க்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இருவருக்கும் தனி தனி ரசிகர்கள் உண்டு. தல அஜித் தற்பொழுது டைரக்டர் வினோத் தயாரிப்பில் ஏ கே 61
நடித்து வருகிறார். அடுத்த படமாக ஏ கே 62 வை டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்று எல்லாருக்கும் தெரியும்.அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானதை அனைவரும் பார்திருப்போம். அடுத்த படமான தளபதி 67 னை லோகேஷ் கனகராஜ் இயக்க ஒப்பந்தம் போட்டிருப்பதாக
தெரியவந்துள்ளது. இந்நிலையில் டைரக்டர் கங்கை அமரன் அஜித்திடம் கதையை கூறி ஓகே சொல்லிட்டார் என்ற தகவல் வெளியானது. அடுத்தகட்ட வேலையாக தளபதி விஜய்யிடம் கதை யை கூறபோவதாகா சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தல தளபதி ரசிகர்கள் வேற லெவல் வெயிட்டிங்கில் உள்ளனர்.