தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலமாக தன்னை ஹீரோயினாக திரையுலகில் அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம்
என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது புதுமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன்
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் வரும் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சமுத்திரக்கனி என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இதில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும்
மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார் . இந்த படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடை ஏற்கனவே குறைந்து இருந்த நிலையில் படத்திற்காக சுமார் ஐந்து கிலோ வரை உடல் எடையை அதிகரித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது……………….