தளபதி விஜய் அவர்கள் கடந்த பபல வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கு என்று திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் இலட்சகணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் சில மாதங்களாக விஜய் அவர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி அரசியல் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதற்கான
பல செயல்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் தனது முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இதையடுத்து இன்றைய நாளில் தனது கட்சியின் பெயர் மற்றும் முக்கிய தகவல்கள் பலவற்றை அறிவிப்பதாக கூறியிருந்தார்.
அதற்கு ஏற்ப தளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதேபோல் கட்சி தொடங்கிய நிலையில் அறிவிப்பு ஒன்றையும் கூறியுள்ளார் அந்த வகையில் அதில் தான் கமிட்டாகி உள்ள படத்தை முடித்து கொடுத்துவிட்டு இனிமேல் படங்களில் நடிக்க போவதில்லை எனவும் முழுவதுமாக அரசியல் பணிகளில்
கவனம் செலுத்த போதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு சந்தோசம் இருக்கிறதோ அதே அளவிற்கு சோகமும் நிறைந்துள்ளது . இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேற லெவலில் பரபரப்பை கிளப்பி வருகிறது……………….